“அமெரிக்காவை உலுக்க காத்திருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல்” – நாட்டின் முக்கிய தலைவர் எச்சரிக்கை!

கொரோனாவில் இருந்து அமெரிக்கா மீண்டும் வரும் நிலையில், மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளதாக நாட்டின் கொரோனா தடுப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார். உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும் உள்ளது. என்ன தான் வல்லரசு நாடாக இருந்தாலும், இங்கு கொரோனாவால் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.

இதன் காரணமாக அங்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்போது அங்கு மெல்ல, மெல்ல கொரோனா பரவ குறைந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது அமெரிக்காவின் புதிய கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருதால், பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், அதாவது டெல்டா வைரஸ் 20 சதவீதம் பேருக்கு பரவியுள்ளது.

இதனால் பிரித்தானியாவைப் போலவே அமெரிக்காவுக்கும் இதனால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வீழ்த்துவதற்கான போராட்டத்தில் மிக வேகமாகப் பரவக் கூடிய டெல்டா வகை பின்னடைவை ஏற்படுத்தும்.

இருப்பினும்,அந்த வகைக் கொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவில் செலுத்தப்படும் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவது திருப்தியளிக்கிறது. இதன் மூலம், நம்மிடம் உள்ள வசதியைப் பயன்படுத்தி டெல்டா கொரோனாவால் வீழ்த்த வேண்டும் என்று, நாட்டின் கொரோனா தடுப்பு குழு தலைவர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!