உயர்க்கல்வியினை இராணுவ மயப்படுத்த நடப்பு அரசாங்கம் முயற்சிக்கின்றது

பல்கலைக்கழக சட்டத்தை புறக்கணித்து கொத்தலாவலை சட்டத்தின் வாயிலாக உயர்க்கல்வியினை இராணுவ மயப்படுத்த நடப்பு அரசாங்கம் முயற்சித்து வருவதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் புதிய சட்ட மூலம் ஒன்றினை கொண்டு வந்துள்ளதாகவும், குறித்த சட்ட மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டதாகும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் அப்போதைய நிலையில் அதனை நிறைவேற்ற முடியாமல் போனதாகவும், தற்போதைய அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி, கொத்தலாவலை பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்’ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!