சில மத்திய கிழக்கு நாடுகள் இருந்து நாட்டுக்கு வருகை தருவதை தடை செய்ய தீர்மானம்

கொரோனா தொற்று அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு, ஆறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து, நாட்டுக்கு வருகை தருவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதன்படி, கட்டார், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைட் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தருவதற்கே இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல், இவ்வாறு தடை செய்வதற்கு கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நாடுகளில் இருந்து வருகை தருவதற்கும், 14 நாட்களுக்குள் அந்த நாடுகளுக்கு சென்றவர்களுக்கும் இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், குறித்த ஆறு நாடுகள் ஊடாக இடைமாறும் பயணிகளுக்கு நாட்டுக்கு வருகை தர அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத் தடை, எதிர்வரும் ஜுலை 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல், நாட்டுக்கு வருகை தர எட்டு ஆபிரிக்க நாடுகளுக்கும் தடை விதிக்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை நேற்று தெரிவித்திருந்தது.

இதன்படி, Angola, Botswana, Lesotho, Mozambique, Namibia, Switziland, Zambia மற்றும் Zimbabwe ஆகிய ஆபிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதலாம் திகதி நள்ளிரவு 12.01 முதல் ஜூலை 31 ஆம் திகதி நள்ளிரவு 11.59 வரை குறித்த தடை அமுலில் இருக்கும் என சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!