அமீரகத்தில் உயிருக்கு போராடிய இலங்கை பெண்: சற்றும் யோசிக்காமல் பாகிஸ்தானியர் செய்த வீர செயல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய பாகிஸ்தானியர் கவுரவிக்கப்பட்டார். ஐக்கியர அரபு அமீரகத்தின் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்லும், Ajman Marina கடற்கரையில், Mohammad Nagman என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கடற்கரைக்கு உள்ளே, அதாவது கடலின் உள்ளே இருந்து பெண் ஒருவரின் குரல் கேட்டுள்ளது. அவர் காப்பாற்றும் படி கத்தியுள்ளார். இதைக் கேட்ட, அவர் சற்றும் யோசிக்காமல் உடண்டையாக கடலில் குத்து, அவரை தண்ணீரில் இருந்து வெளியே இழுத்து வந்துள்ளார்.

அதன் பின் இது குறித்து வெளிநாட்டு சிவில் பாதுகாப்புக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அவர்கள் உடனடியாக முதலுதவியாக அவருக்கு தேவையான சிகிச்சை அளித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து காவல்நிலைய அதிகாரி Ghaith Khalifa Salem Al Kaab கூறுகையில், தேவைப்படும் நேரத்தில், அவரின் உயிரைக் காப்பாற்றிய அவரின் செயக் பாரட்டுக்குரியது. அதுமட்டுமின்றி அவரின் வீரச் செயல் பாராட்டுக்குரியது, காப்பாற்றப்பட்ட பெண் இலங்கையைச் சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க பெண் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்த பெண் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய Mohammad Nagman செயலை அங்கிருக்கும் இணையவாசிகள் பாராட்டி வருவதுடன், இணையத்தில் டிரண்டாக்கி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!