“நமது கிரகத்தை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம்” – விண்வெளி சென்று திரும்பிய ஜெப் பெஸோஸ் கவலை!

உலகின் பெரும் பணக்காரரும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெஸோஸ் ப்ளூ ஆரிஜின் தன்னுடைய ராக்கெட்டில் விண்வெளி பயணத்தை முடித்து திரும்பிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட ராக்கெட்டில் ஜெப் பெஸோஸ், அவருடைய சகோதரர் மார்க் பெஸோஸ், சிறப்பு விருந்தினராக வேலி பங் என்ற விண்வெளி வீராங்கனை மற்றும் ஆலிவர் டீமன் என்ற பணக்காரர் ஆகியோர் புறப்பட்டு திரும்பினர்.

இது குறித்து ஜெப் பெஸோஸ் கூறுகையில், விண்வெளிக்கு சென்று திரும்பும் போது, விண்வெளி வீரர்கள் அந்த பயணம் தங்களை மாற்றிவிட்டதாக கூறுவர். அதே போன்று தான், பூமியின் அழகு, ஆச்சரியத்தை ஒரு வியப்பை கொடுத்தது.

பூமியில் இருந்து பார்க்கும்போது வளிமண்டலம் மிகவும் பெரிதாகத் தெரிர்யும். ஆனால், உயரே செல்லச் செல்ல அது மிகவும் மெலிதானதாகத் தெரிகிறது. பலவீனமதுபோன்று தெரிகிறது.

நாம் நமது கிரகத்தை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் கண்ணால் பார்ப்பது வேறு, நம் அகக் கண்ணால் உணர்வது வேறு என்று கூறினார். இந்த பயணம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததால், ராக்கெட்டில் சென்ற அனைவரும் தங்களுடைய பெல்ட்களில் இருந்து விடுபட்டு, ஜீரோ கிராவிட்டியை அனுபவித்தனர்.

அப்போது ஜெப் பெஸோஸ் சில் இனிப்பு மிட்டாய்களை சிதறவிட அதை இளைஞர் ஆலிவர் டீமன் தனது வாயால் கவ்வினார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் பயணத்தின் போது சில நினைவுப் பொருட்களையும் இந்த 4 பேர் கொண்ட குழு கொண்டு சென்றது.

அதில் ரைட் சகோதரர்களின் முதல் விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு பொருள், 1783ல-ஆம் ஆண்டு உலகின் முதல் ஹாட் ஏர் பலூன் பறந்தது. அதிலிருந்து செய்யப்பட்ட வெண்கல மெடல் ஒன்று மற்றும் அமெரிக்க விமானி எமீலியா இயர்ஹாட்டின் கண்ணாடி ஆகியனவற்றைக் கொண்டு சென்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!