இலங்கையில் கோவிட் தொற்றால் அதிகளவான ஆண்கள் உயிரிழப்பு!

இலங்கையில் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 75 வீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும், 24 வீதம் பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், 1.2 வீதம் பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 1,714 பேர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 291,291 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, மாத்தளை மாவட்டத்தின் இரு பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவின் அகலவத்த கிராமம் மற்றும் ஹரஸ்கம கிராமம் ஆகிய பிரதேசங்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!