பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னணி கண்டுபிடிப்பு

கண்டி, பேராதனையில் 4 பிள்ளைகளின் தாய் ஒரே நாளில் ஒரே நிலையத்தில் இரண்டு மொடர்னா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தவறுதலாக மற்றும் கவனயீனம் காரணமாக இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையத்தில் மொடர்னா முதலாவது தடுப்பூசியை பெற்ற அந்த பெண் தடுப்பூசி பெற்ற பின்னர் கண்காணிப்பு காலப்பகுதியிலும் அதே நிலையத்தில் இருந்துள்ளார்.

அதற்கமைய தடுப்பூசி வழங்கிய சுகாதார பிரிவினர் அவருக்கு இரண்டாவது முறையாகவும் மொடர்னா தடுப்பூசி வழங்கியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் இவ்வாறான சம்பவம் பதிவாகிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இரண்டு தடுப்பூசிகளும் பெற்ற பெண் தொடர்பில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ஒரே நேரத்தில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்துவதால் எவ்வித பின்விளைவுகளும் ஏற்பாடாதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!