நாட்டில் மேலும் 1785 பேருக்கு கொரோனா

நாட்டில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 785 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 93 ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 65 ஆயிரத்து 708 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 43 உயிரிழப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

30 முதல் 59 வயதுக்குட்பட்ட 08 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 35 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 22 ஆயிரத்து 911 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!