இரண்டாம் கட்டமாக AstraZeneca நாட்டிற்கு கிடைக்கப்பெறும் திகதி தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வ திகதி அறிவிக்கப்படவில்லை

முதற்கட்டமாக AstraZeneca தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இந்தமாத இறுதிக்குள் இரண்டாவது தடவையாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இரண்டாம் கட்டமாக AstraZeneca நாட்டிற்கு கிடைக்கப்பெறும் திகதி தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வ திகதி அறிவிக்கப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் Ranjith Bathuwanthuduwa தெரிவித்துள்ளார்

இதனிடையே முன்னதாக கடந்த 19 அல்லது 21 ஆகிய திகதிகளில் AstraZeneca தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் அச்சமடையத்தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் அடிப்படையில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 1.45 மில்லியன் AstraZeneca தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பபெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

அத்துடன் முதற்கட்டமாக AstraZeneca தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக Pfizer தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் ஜப்பான் அரசாங்கத்தினால் AstraZeneca தடுப்பூசிகள் நாட்டிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!