பிரித்தானியாவில் மது போதையில் பெண் செய்த கொடூர செயல்!

பிரித்தானியாவில் பெண் ஒருவர், ஆண் நபரை மது போதையில் கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கிய சம்பவத்தில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Nottingham-ல் Chilwell பகுதியில் இருக்கும் குடியிருப்பில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் 4-ஆம் திகதி பெயரிடப்படாத நபருக்கும், 28 வயது மதிக்கத்தக்க Britanny Stone-க்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஜோடி, இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தான் வசித்து வந்துள்ளனர். இந்த வாக்குவாதம் காரணமாக கடும் கோபடைந்த Britanny Stone மது போதையில் இருந்த போது, அவரை பின் தொடர்ந்து, வீட்டில் இருந்த சமயலறை கத்தியை எடுத்துச் சென்று, கத்தியால் அவரின் பின் தலையில் பலமாக குத்தினார்.

இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது கத்தியானது அவரது மூளைக்குள் ஊடுருவியதால், பார்க்கவே கொடூரமாக இருந்தது.

இதற்கிடையில் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரை உடனடியாக கைது செய்தனர். Nottinghamshire காவல்துறையின் துப்பறியும் கான்ஸ்டபிள் பீட்டர் பர்ரோஸ் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இது ஒரு கொடூரமான தாக்குதல், பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருக்கிறார்.

ஆனால் காயம் அவருடைய வாழ்க்கையையே பாதித்துவிட்டது. ஏனெனில் கத்தி மூளைக்குல் ஊடுருவியதால், அவரது கண் அகற்றப்பட வேண்டி இருந்தது. அவரது மூளையில் இரத்தப் போக்கு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட போது, Britanny Stone குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவரது முகத்தில் ஏற்பட்ட அடியின் சக்தி கத்தியால் அவரது மூளைக்குள் ஊடுருவியது. அவர் தனது கண் அகற்றப்பட வேண்டியிருந்தது.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 21-ஆம் திகதி Nottingham Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. Nottinghamshire காவல்துறை கத்தி குத்து தொடர்பான அறிக்கைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, இந்த சம்பவம் தொடர்பாக அந்த் பெண்ணை கைது செய்ய நாங்கள் விரைவாக செயல்பட்டோம். இந்த வகையான வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது,

மேலும் எங்கள் சமூகங்களில் கத்தி குத்து சம்பவங்களை விரட்டுவதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த மக்களுக்கு உறுதியளிக்கிறோம்.

இதனால், வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவதாக நம்பப்படும் எவர் மீதும் வலுவான நடவடிக்கை எடுப்போம் என்று அவர் உறுதியாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!