நாட்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டுள்ளது

?????????????????????????????????????????????????????????
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 இலட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 5 இலட்சத்துக்கும் அதிக
எண்ணிக்கையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தினத்தில் 4 இலட்சத்து 18 ஆயிரத்து 494 பேருக்கு முதல் கட்டமாக sinopharm கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், 56 ஆயிரத்து 738 பேருக்கு இரண்டாம் கட்டமாக செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், 38 ஆயிரத்து 430 பேருக்கு Pfizer முதல் கட்ட கொரோனா தடுப்பூசியும், 2 ஆயிரத்து 168 பேருக்கு Moderna முதல் கட்ட கொரோனா தடுப்பூசியும் நேற்று செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 71 இலட்சத்து 88 ஆயிரத்து 692 பேருக்கு Sinopharm முதல் கட்ட கொரோனா தடுப்பூசியும், 16 இலட்சத்து 63 ஆயிரத்து 421 பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு Covishield முதலாவது தடுப்பூசியும், 3 இலட்சத்து 85 ஆயிரத்து 885 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 81 பேருக்கு Sputnik v முதலாவது கொரோனா தடுப்பூசியும், 14 ஆயிரத்து 503 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 101 பேருக்கு Pfizer முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், 7 இலட்சத்து 11 ஆயிரத்து 793 பேருக்கு Moderna முதலாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!