சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா?- மகிந்தவுக்கு சவால்

2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து நிதியைப் பெறவில்லை என்று, மகிந்த ராஜபக்ச சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திசநாயக்க.

நியூயோர்க் ரைம்ஸ் அண்மையில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில், அதிபர் தேர்தலின் போது, சீன நிறுவனம் ஒன்றின் கணக்கில் இருந்து. 7.6 மில்லியன் டொலர் நிதி, மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் பரப்புரைக்காக வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதனை சீனாவும், மகிந்த ராஜபக்சவும் மறுத்திருக்கின்ற நிலையிலேயே அமைச்சர் நவீன் திசநாயக்க இந்தச் சவாலை விடுத்திருக்கிறார்.

”மகிந்தவுக்கு எதற்காக, சீன நிறுவனம் இந்தளவு பெருந்தொகையான நிதியைக் கொடுக்க வேண்டும்.?

அவ்வாறு நாங்கள் நிதி பெறவில்லை.

அப்படியானால், முன்னர் பிரித்தானியர் ஆட்சியில் இருந்த எமது நாடு இப்போது சீன ஆட்சியின் கீழா இருக்கிறது.

மகிந்த ராஜபக்சவின் மீது நாங்கள் எந்த தவறையும் கூற விரும்பவில்லை. அவர் நாட்டுக்காக பணியாற்றினார். போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

எனவே, இந்த நிதியை நீங்கள் பெற வில்லை என்றால் ஒரு சத்தியக்கடதாசியை சமர்ப்பியுங்கள். அப்போது தான் உங்களை நம்புவோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!