மீண்டும் நெருக்கடி ஏற்படும்!

பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட் டல்களைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமெனவும், தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், கடந்த மே மாதம் நாடு முகங்கொடுத்த நிலைக்கு மீண்டும் முகங்கொடுக்க நேரிடும் எனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கடந்த சில தினங்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகளவில் நாட்டில் இனங்காணப்படுவார்களாக இருந்தால், கடந்த மே மாதம் நாடு முகங்கொடுத்த அதே நிலைக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

அலுவலகங்கள், சுப்பர்மார்க்கட்டுகள், அங்காடிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான இடங்களில் கடந்த காலங்களில் இந்த சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் பின்பற்றுவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மீண்டும் இதனை பின்பற்ற வேண்டும். மேற்குறித்த இடங்களுக்கு வந்து செல்பவர்களின் பெயர் விவரங்கள் மீண்டும் பெறப்பட வேண்டும். வருவோருக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

எவ்வாறாயினும் இவற்றை முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றால், நாட்டில் மீண்டும் தொற்று அதிகளவில் பரவும் பட்சத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதற்கான சந்தர்ப்பத்தை குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!