சினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்யவில்லை! லலித் வீரதுங்க

கோவிட் தொற்று நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக சினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசித் திட்டத்திற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் லலித் வீரதுங்க இதனை இன்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் சினோவாக் தடுப்பூசிகள் தொடர்பில் சர்வதேசத்தில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. சினோவாக் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தியவர்களும் மீண்டும் ஒரு தடுப்பூசிக்கு பரிந்துரைக்கப்படும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தினால் அவசர பயன்பாட்டுக்காக சினோவாக் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதும், டெல்டா மாறுபாட்டுக்கு எதிரான தன்மையை, அது கொண்டிருக்கிறதா? என்பது தொடர்பிலும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கை சுமார் 13 மில்லியன் சினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாகவும், அதுவும் டெல்டாவுக்கு எதிரான ஏனைய தடுப்பூசிகளின் விலையைக் காட்டிலும், சினோவாக் தடுப்பூசி ஒன்று 15 டொலர்களுக்கு இலங்கையால் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இதனை லலித் வீரதுங்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!