13 வயதில் தாயை சீரழித்த கொடூரன்: நீதிக்காக போராடிய மகள் – இறுதியில் நடந்த சம்பவம்!

பிரித்தானியாவில் 13 வயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தன்னுடைய தாய்க்காக, இப்போது நீதியை வென்றுள்ளார். பிரித்தானியாவின் Birmingham-ல் இருக்கும் Erdington பகுதியைச் சேர்ந்த 74 வயது மதிக்கத்தக்க Carvel Bennett என்ற நபரே இந்த கொடூர குற்றத்தை செய்துள்ளார். சுமார் 50 ஆண்டுகள் இதற்கான தண்டனையில் இருந்து தப்பியிருந்த அவரை, அவரது மகளே நீதி முன் கொண்டு வந்து சிறையில் அடைத்துள்ளார்.

நீதிமன்றம் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 1970-ஆம் ஆண்டுகளில் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி(எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெயர் குறிப்பிடவில்லை) Carvel Bennett-ல் பாலியல் பலாத்காரத்திற்குள்ளானார்.

அதன் பின் அந்த சிறுமி கர்ப்பமாகி, அதன் பின் தன்னுடைய 14 வயதில் குழந்தையை பெற்றெடுத்தார். பாதிக்கப்பட்ட சிறுமி அந்த நேர்த்தில் புகார் அளிக்க விரும்பவில்லை.

இதையடுத்து பாலிபலாத்காரம் செய்யப்பட்டதால், பிறந்த குழந்தையான 18 வயதான அவரது மகள்(Daisy தற்போது 45 வயது), தன்னுடைய பிறப்பைப் பற்றி அறிய விரும்பினார்.

அப்போது அவருக்கு தன்னுடைய தாய்க்கு நடந்த கொடுமைகள் பற்றி தெரியவர, சுமார் ஒரு தசாப்தமாக(10 ஆண்டுகள்) போராடினார். ஏனெனில், சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் குற்றத்திற்கு பலியானது அவள் கிடையாது, அவள் பிறந்த தாய் என்று கூறப்பட்டதால், அந்த வழக்கின் பெரும்பகுதியை அவள் வழக்குத் தொடர தயக்கத்தை எதிர்கொண்டாள்.

அதன் பின், பாலியல் பலாத்காரத்தின் மூலம் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர் என்பதன் அடிப்படையில் இந்த வழக்கை தொடர்ந்தார். இதையடுத்து இது தொடர்பான விசாரணை நடைபெற்றது.

அதில், அந்த பெண்ணின் தாயார் அவர் பாலியல் பலாத்காரம் செய்த போது, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. சண்டை போட முடியவில்லை, அவர் சொன்னதை செய்தேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

ஆனால், Carvel Bennett இந்த குற்றத்தை மறுக்க, அதன் பின் அந்த பெண்ணின் மகளின் டி.என்.ஏ பரிசோதனை நடைபெற்றது. அதுமட்டுமின்றி சுமார் 40 ஆண்டுகளுக்கு அந்த பெண்ணின் தாயாரிடமும் பொலிசார் வாக்குமூலம் பெற, இறுதியில் Carvel Bennett குற்றவாளி என்பது உறுதியானது.

மேலும், அந்த தாயின் மகள் விசாரணையின் போது, நானே இதற்கு சாட்சி, நாங்கள் பாலியல் பலாத்கார குழந்தைகள் அல்ல, நன்மைகளுக்கான கற்பழிப்பு பிரிவு அல்ல, நாங்கள் மோசமான விதை அல்ல என்று கூறிய அவர், தற்போது பலாத்காரத்தால் கருத்தரிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சட்டத்தில் மாற்றங்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணை Birmingham Crown நீதிமன்றத்திற்கு வந்தது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணைக்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இதில், குற்றவாளியான Carvel Bennett-க்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பை வாசித்த நீதிபதி, Carvel Bennett செய்த குற்றம் இரண்டு உயிர்களை பாதித்துவிட்டது. அதாவது அவருடைய மகள் சந்தேகத்திற்கு இடமின்றி அவளது தாயைப் போலவே பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

நீதிக்காக தொடர்ந்து போராடிய அவரை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!