மருத்துவமனை அவசர நிலையை அறிவிப்பது இயல்பானது – வைத்தியர் ஹேமந்த ஹேரத்

டெல்டா அலை காரணமாக இலங்கை, மருத்துவ பேரலையை நோக்கி செல்வதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், நோயாளிகள் நிரம்பியதன் காரணமாக நேற்று இரண்டு முக்கிய மருத்துவமனைகள் அவசர நிலையை அறிவித்தன.

இரத்தினபுரி பொது மருத்துவமனை மற்றும் கராப்பிட்டிய போதனா மருத்துவமனை என்பன நேற்று அவசரகால நிலையை அறிவித்தன, இது இலங்கையின் மருத்துவ வரலாற்றில் அரிதாகவே இடம்பெறும் சம்பவமாக கருதப்படுகிறது.

கராப்பிட்டிய போதனா மருத்துவமனை பதில் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா, உள்ளகக் கடிதம் ஒன்றின் மூலம், தனது மருத்துவமனை ஊழியர்களுக்கு நோயாளிகளால் வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து எச்சரித்துள்ளார்.

அத்துடன் மருத்துவமனையில் அவசர நிலையை அறிவிப்பதாக மருத்துவர்கள் மற்றும் பிரிவு தலைவர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட மூன்று சிகிச்சை அறைகள், நிரப்பப்பட்டதாகவும் நேற்று மட்டும் பாதிக்கப்பட்ட 140 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பொது மருத்துவமனையின் பணிப்பாளர், ரொட்றிகோவும் மருத்துவமனையில் நேற்று நடந்த அவசர கொவிட் கூட்டத்தைத் தொடர்ந்து அவசர நிலையை அறிவித்துள்ளார்.

எனினும் சில காரணிகளைக் கருத்தில் கொண்டு ஒரு மருத்துவமனை அவசர நிலையை அறிவிப்பது இயல்பானது என்று சுகாதார சேவைகள் துணைப்பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!