நாடு முடக்கப்படாது!- அரசாங்கம் அறிவிப்பு.

தற்போதைய சுகாதார நிலைமை காரணமாக நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பதில்லை என இன்று ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பில், முடிவு செய்யப்பட்டுள்ளது இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், சில கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் . இதன்படி, 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரும் வகையிலான திருமண மண்டபமொன்றில் 150 பேரை மாத்திரம் அனுமதிக்கப்படுவோர். அத்துடன், 500ற்கு குறைவானோர் அமரும் வகையிலான திருமண மண்டபத்தில் 100 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளில் பங்கேற்க 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அரச ஊழியர்கள் அனைவரையும் அழைக்கும் சுற்றறிக்கையை மாற்றியமைத்து, கடமைக்கு அழைக்க வேண்டிய நபர்களை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செப்டம்பர் 1 வரை அனைத்து அரச விழாக்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!