ஒன்றுகூடுவதே தொற்றுக்கு காரணம்! – புலனாய்வுத்துறை தகவல்

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் ஒன்றுகூடுவதே நாடு பூராகவும் கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு காரணம் என புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளதாக, கொவிட் தடுப்பு விசேட குழுவுடன், நடத்திய கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில், நாடு பூராகவும் 120 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், குறைந்தது 1,500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றாது இவ்வாறு பொதுமக்கள் ஒன்றுகூடுவது, நாடு பூராகவும் வேகமாக கொவிட் நோய்த் தொற்று பரவுவதற்கு காரணமாகியுள்ளதென்று, புலனாய்வுத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!