எரிபொருள் இறக்குமதியை நிறுத்தவும் வாய்ப்புள்ளது – ஹர்ச டி சில்வா

இலங்கை எதிர்காலத்தில் எரிபொருள் இறக்குமதியை நிறுத்தவும் வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் எச்சரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் சீர்குலைந்தால், நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்குவார்கள்.

ஏற்கனவே இலங்கையில் உள்ள சமையல் எரிவாயு நிறுவனம் ஒன்று சமையல் எரிவாயு இறக்குமதி செய்துள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பால் மாவை இறக்குமதி செய்வதையும் நிறுத்த சம்பந்தப்பட்ட நிறுவனம் தீர்மானித்துள்ளதால், சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோயுடன் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எந்த தீர்வையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது போயுள்ளது எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!