கொரோனா உடல்களை தகனம் செய்ய கட்டணம் அறவிடப்படுகின்றதா?

கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்யும் போது, இறந்தவரின் குடும்பத்தினரிடம் எவ்வித கட்டணங்களையும் அறவிடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் கட்டணங்களை அறவிட வேண்டாம் என உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் செலவாகும் பணத்தை உள்ளூராட்சி சபைகளுக்கு அரசாங்கம் வழங்கும் எனவும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கூறியுள்ளார்

உள்ளூராட்சி சபைகளின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உடல்களை தகனம் செய்ய தேவையான எரிவாயுவை மிக விரைவில் இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

நாடு முழுவதும் 240க்கும் மேற்பட்ட சுடுகாடுகள் இருப்பதால், எவ்வித பிரச்சினையும் இன்றி கொரோனாவால் இறப்போரின் உடல்களை தகனம் செய்ய முடியும் எனவும் ஜனக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!