ஆப்கான் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் மஹிந்த பேச்சு!

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் உரையாடியுள்ளார். இந்த தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானில் 2001 முதல் 2014 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்துள்ளார். அவர் தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியிடம் பேசிய பிரதமர், நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து விசாரித்ததுடன், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஸ்ரீலங்கா தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!