ஜெப் பெஸோஸை சீண்டும் எலான் மஸ்க்!

உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்கு வந்த எலான் மஸ்க், அமேசான் நிறுவனருக்கு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் டாப் 10 முதல் 100 வரையிலான பட்டியல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கும். அந்த வகையில், இந்த 2021-ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மாஸ்க் முதல் இடத்தை பிடித்தார்.

இவரைத் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

தற்போது டெஸ்லா பங்குகளின் விலை உயர்வால் எலான் மஸ்க் 20 ஆயிரம் கோடி டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஜெப் பெஸோஸ் 19 ஆயிரத்து 200 கோடி டொலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இவர்கள் இருவருக்கிடையே தான் யார் முதலில் என்ற போட்டி நிலவும், பண்க்காரர்கள் என்பதை தாண்டியும், இருவரும் நீயா? நானா? என்று பல துறைகளில் போட்டியில் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், விண்வெளி திட்டங்கள், தானியங்கி கார் உற்பத்தி போன்ற துறைகளில் இருவருக்கும் கடும் போட்டி இருந்து வருகிறது.

இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதால், அதை கொண்டாடும் வகையில், அமேசான் நிறுவனருக்கு வெள்ளிப் பதக்கத்துடன், 2-வது நம்பரை குறிப்பிடும் வடிவத்தில் மிகப்பெரிய நம்பர்-2 என்ற சிலையை அனுப்புகிறேன் என்று, உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் இதழின் மெயில் பெயரை போட்டிருந்தாக குறிப்பிட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!