ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்ற புமியோ கிஷிடா!

ஜப்பானின் பிரதமராக பதவி வகித்து வந்த யோஷிடே சுகா, கொரோனா நோய் தொற்று பரவலை கையாண்ட விதம் காரணமாக பொதுமக்கள் அவர் மீது அதிருப்தி அடைந்தனர். அவருக்கான ஆதரவும் குறைந்த நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் வகையில் கடந்த வாரம் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி தேர்தலை நடத்தியது. இதில் அக்கட்சியின் தலைவராக புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பிலும் கிஷிடா வெற்றி பெற்றார்.

இதனையடுத்து நேற்று புமியோ கிஷிடா புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. புதிதாக 13 பேர் முதல் முறையாக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஜப்பான் புதிய பிரதமருக்கு மோடி தனது வாழ்த்து செய்தியில், இந்தியா-ஜப்பான் கூட்டுறவை பலப்படுத்தவும், நமது பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளத்தை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், கிஷிடாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அமெரிக்க மற்றும் ஜப்பானின் உறவு புதிய சவால்களை இரு நாடுகளும் எதிர்கொள்ள உதவும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!