முதலமைச்சர் வேட்பாளராக சமிந்திராணி கிரியெல்ல?

மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்திராணி கிரியெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு இலங்கையில் பல முக்கிய அரசியல் கட்சிகள் போட்டிக்கு பல புதிய முகங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளன.

மத்திய மாகாண சபைத் தேர்தலில் பிரபல அரசியல் காட்சிகள் பல போட்டியிடவுள்ளன. இது மத்திய மாகாண சபை தேர்தல் வரலாற்றிலேயே நாட்டின் அரசியலில் ஒரு முன்னோடியாக அமையவுள்ளள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே, மத்திய மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்த்ராணி கிரியெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!