நாட்டில் 12 மணிநேர மின்வெட்டா?

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் நாட்டின் 12 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிட்டால், நாட்டின் மின்சார உற்பத்தியில் 45 சதவீத அளவு இழக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதன்ஊடாக, 12 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கைக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படாவிட்டால், சபுகஸ்கந்த எண்ணைய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!