லண்டனில் 8 பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்ட அகதி இளைஞன்!

லண்டனில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர் ஒரு ஆப்கானிஸ்தான் அகதி என்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் உள்ள Notting Hill-ல் வசித்து வந்த Hazrat Wali என்ற 18 வயது இளைஞன், கடந்த கடந்த 12-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் Twickenham-வில் உள்ள Richmond upon Thames கல்லூரிக்கு அருகில் இருக்கும் கால்பந்து மைதானத்தில் எட்டு பேர் கொண்ட குழுவால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை Fulham-ல் உள்ள West London Coroner’s நீதிமன்றத்தில் துவங்கியது. அப்போது, Hazrat Wali-யின் மூத்த சகோதரர் உடலை அடையாளம் கண்டதாக கூறியதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டு மே 8-ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் பிறந்த Hazrat Wali, இங்கு construction and building சம்பந்தமான படிப்பை படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று மார்பு மற்றும் வயிற்றில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 18-ஆம் திகதி Hazrat Wali-யின் மூத்த சகோதரர் அவரது உடலை அடையாளம் கண்டுள்ளார்.

முழு பிரேதபரிசோதனை முடிவுகள் இன்னும் வராத காரணத்தினால், விசாரணையில் உயிரிழந்தது Hazrat Wali தான் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக Hammersmith-ஐ சேர்ந்த 16 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, அவர் மிது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சட்ட காரணங்களுக்காக தற்போது அந்த இளைஞன் குறித்த முழு விபரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!