கடந்த கால நிர்வாக முறைகேடு உரிய முறையில் பரிசீலிக்கப்படும் – யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் விளக்க உரையில் தெரிவிப்பு

யாழ் மாநகரசபையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூற ப்படும் நிர்வாக முறைகேடுகள் உரியமுறையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தனது கொள்கை விள க்க உரையில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையின் கன்னி அமர்வு நேற்று மாநகர சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் தனது கொள்கை விளக்க உரையை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு யாழ்.மாநகர முதல்வர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதியும் தீராத வேட்கையும் கொண்டவன் நான். அதனை நோக்கி பயணிப்பதில் உறுதியாக இருப்பவன். தமிழ்த் தேசியத்தை நிலைநிறு த்துகின்ற எமது பாதையும் பயணமும் கடினமானதாக இருப்பினும் அது ஜனநாயக ரீதியாகவும் மக்களின் அங்கீகாரத்துடன் கூடியதாகவும் சர்வதேச அரங்கில் மதிப்பார் ந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

மக்களின் விடிவுக்கான நெடிய போராட்ட வரலாற்றை கடந்து சென்றுகொண்டிருக்கி ன்றோம். அந்தப் போராட்டத்தில் அகிம்சை சார் மென்வலு முயற்சிகளும் போர் சார் வன் வலு முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன.

ஆனால் சமகாலத்தில் எமது மக்களும் இந்த நாடும் சர்வதேசமும் மென்வலு சார்ந்த ஜன நாயக வழிமுறைகளே சாலச் சிறந்தது என எமக்கு மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். அதுவே சிறப்பானதும் நிச்சயமானதுமாகும் என்பதே என தும் நான் சார்ந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினதும் நம்பிக்கையாகும்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் மாநக ரின் முதல்வராக நான் அமர்ந்திருப்பது எமது மக்களுக்கான விடிவு நோக்கிய பயணத்தை மேலும் வலுவூட்டுவதற்காக அன்றி, வேறு நோக்கங்கள் அல்ல.

எமது பதவிகளும் எமக்கு வழங்கப்படு கின்ற அதிகாரங்களும் எம்மையும் எமது மக்களையும் எமது மக்களுக்கான விடிவு நோக்கிய பயணத்திலிருந்து திசை திருப்பு மாகவிருந்தால், அந்தக் கணமே எமது பதவி களைத் துறக்கவும் எமது அதிகாரங்களைத் தூக்கி எறியவும் நாம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை.

தமிழ் பேசும் மக்கள் என்ற பொது அடை யாளத்தோடு பல்வேறு கட்சிகளாக- குழுக்க ளாகப் பிரிந்து நாம் தேர்தல்களை எதிர் கொண்டோம்.

இப்போது இந்த அவையிலே தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளாக தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளாக நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்டு யாழ்.மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள் என்ற அடையாளம் சுமந்து வந்திருக்கின்றோம்.

இன்று முதல் கட்சி பேதங்களுக்கு அப் பால், எமது மக்களின் நலன்களுக்காக உழை ப்பவர்களாக நாம் அனைவரும் ஒன்றி ணைந்து செயற்படவேண்டும்.

கடந்த காலங்களில் பல்வேறு நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக பலரும் முறைப்பாடுகளை முன்வைத்து வந்துள்ளார்கள்.

அவை உரியமுறையில் பரிசீலனை க்கு எடுத்துக்கொள்ளப்படும். வடக்கு மாகாண உள்@ராட்சி அமைச்சு இது விடயத்தில் முன்னெடுக்கும் அனைத்து விதமான நடவடிக் கைகள் மற்றும் விசாரணைகளுக்கு இந்த அவை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என மேலும் தெரிவித்தார்.