எரிபொருள் துறைமுகம், , தபால் போக்குவரத்து , அரச வங்கிகள் – அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

நாட்டில் எரிபொருள் துறைமுகம், , தபால் போக்குவரத்து , அரச வங்கிகள் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுமக்களின் வாழ்க்கைக்கு பொருத்தமான அத்தியாவசிய சேவைகளை இடையூறு இன்றி பேணுவது இதன்நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சேவைகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அரச திணைக்களங்கள் அரச வங்கிகள் உள்ளுராட்சி அமைப்புக்கள் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!