முன்கள பணியாளர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

சுகாதார பணியாளர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு ஒரு மில்லியன் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் 4 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, பல்வேறு காரணங்கள் நிமித்தம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத நபர்கள் தொடர்பில் கண்டறிந்து வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!