வேறு ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் இரு அமைச்சர்கள்?

அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேறு ஒரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்தின் அடிப்படையில், அவர்கள் அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு, அரசாங்கத்தை விமர்சிக்காது, அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லுமாறும் அவர்களிடம் கோருகிறேன் எனவும் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சனத் நிஷாந்த இதனை கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!