சூனியத்தில் சிக்கியுள்ள ராஜபக்சர்கள்! மந்திரவாதிகளாக வாசு, விமல்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தினுள் பிரிவினைகளும் பிளவுகளும் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் காணப்படுவதாகப் பேசப்படுகின்றது.

இது தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கிறது தமிழ்வின் பார்வைகள் தொகுப்பு,
நாட்டில் தற்போது பல தரப்பட்டவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அரசாங்கக் கட்களினுள்ளும் பல மோதல்களும் ஆர்ப்பாட்டங்களும் பரவலாக நாடெங்கிலும் நடைபெற்ற வண்ணத்தானுள்ளது.

அந்த வகையில், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் பயணங்களுக்குத் தடை ஏற்படுத்துவோர், வெளியேற்றப்படுவர் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பயணத்திற்குத் தடை ஏற்படுத்தும் தரப்பினர் ஆளும்கட்சியா, எதிர்க்கட்சியா அல்லது வேறும் சக்திகளா என்பது பற்றி கரிசனையில்லை.
அவ்வாறான அனைத்து தரப்பினரையும் எமது பாதையிலிருந்து அகற்றுவதற்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து தரப்புக்களும் பாதையிலிருந்து அகற்றப்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அண்மைய நாட்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பகிரங்கமாக விமர்சனம் செய்து வரும் விமல், வாசு மற்றும் உதய கம்மன்பிலவிற்கு(Udaya Gammanpila) இந்த எச்சரிக்கையைச் சாகர காரியவசம் விடுத்துள்ளாரா என தெற்கு ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசாங்கம் ஒரு திசையில் செல்கிறது. பதினொரு பங்காளி கட்சிகளான நாங்கள் வேறு திசையில் பயணிக்கிறோம். நாங்கள் தேசியவாத இடதுசாரி திசையில் பயணிக்கிறோம். அரசின் திட்டம் எங்களுக்கு ஒத்துவராது. எதிர்காலத்தில் 11 பங்காளி கட்சிகளும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்” என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara)தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களும் அரச தலைவர் மற்றும் நிதியமைச்சரால் எடுக்கப்படுவதாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) பிரதமராக இருந்த போதிலும் அவர் அரசியல் ரீதியாகச் செயலிழந்து விட்டதாகவும் இந்த போராட்டத்தில் அரசியல் களத்திலிருந்து தான் விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara)தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருக்கும் பெருமளவு மக்கள் அரசாங்கத்தை விட்டு விலகுவதற்காக எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senarathne) தெரிவித்துள்ளார்.

சிலர் வெகு விரைவில் அரசாங்கத்தை விட்டு விலகி மாற்றம் ஒன்று மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளனர். எதிர்வரும் காலங்களில் கூட்டு ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கி தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும்.

வெகு விரையில் ஒரு நாள் காலை விடியும் போது அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு புதிய அரசாங்கம் உருவாகியுள்ளதென்ற செய்தியை வெளியிட முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜித சேனாரத்ன (Rajitha Senarathne) தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தின் தவறான கொள்கைத் திட்டங்கள் காரணமாக வெகு விரைவில் சமூக பிளவொன்று உருவாகப் போவதாகவும் அதனைத் தடைகள் போட்டு நிறுத்த முடியாது எனவும் சபையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த நாட்டில் அரச ஊழியர்கள் சுமையல்ல மாறாக ராஜபக்சவினரின் குடும்ப ஆட்சியே இந்த நாட்டில் சுமையாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவர்களின் கொள்கையில் நாடு பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டுள்ளது. எனவே நாடாளுமன்றமாவது நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களைத் துன்பத்துக்குள் தள்ளிய தேசிய வளங்களை விற்பனை செய்த அதேபோல் எதிர்காலத்தில் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ராஜபக்ச அரசை வீழ்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே வீதியில் இறங்கியுள்ளோம்.இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை எமது போராட்டம் தொடரும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது ஆரம்பம் மட்டுமே 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகர்வுகள் அதிரடியாக இருக்கும். மக்களுடன் அரசு விளையாட முடியாது என்று போராட்டத்தில் பங்கேற்ற ராஜித சேனாரத்ன எம்.பி. தெரிவித்துள்ளார்.

5 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை ஆட்சி செய்ய விடப்போவதில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது எச்சரித்தார்.

இந்த நிலையில் அரசாங்கத்தைக் காப்பாற்ற எவரும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பசில் ராஜபக்சவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்பராலும் நாட்டில் மீதியாக இருப்பதையும் இல்லாது செய்துவிடுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கத்திற்குள் பிளவுகள் ஏற்படுமா? அவ்வாறு பிளவுகள் ஏற்படுமாயின் அடுத்து அரசாங்கத்தின் நிலைதான் என்ன? நாட்டு மக்கள் தற்போது எதிர் கெண்டு வரும் பிரச்சினைக்கான தீர்வுகள் விடைகாணப்படுமா? இவ்வாறான பல கேள்விகள் விடைகாணப்படாமலே காணப்படுகின்றன பொறுத்திருந்து பார்க்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!