நாடு தொடர்பில் சிந்தித்து புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும்

சர்வதேச பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு,நாட்டை முன்னேற்றுவதற்காக எதிர்காலத்தில் பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஜனாதிபதிஏற்றுமதி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இவ்வாறுகுறிப்பிட்டார்.

அத்துடன், மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டாலும், எதிர்வரும்காலங்களில் அதன் பிரதிபலன்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்குமெனவும் ஜனாதிபதிசுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறுகியகால சிக்கல்களை வெற்றிகொண்டதன் பின்னர் பொருளாதார நிவாரணங்களை வழங்கமுடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஆகவே நாடு தொடர்பில் சிந்தித்து புரிந்துணர்வுடன் செயற்படுமாறும் ஜனாதிபதி பொதுமக்களிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றகொள்கை ரீதியான தலையீடுகளின் நன்மைகளை நாடு தற்போது அனுபவித்து வருவதாகவும் ஜனாதிபதிகுறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏற்றுமதித் துறையில் நிலவும் சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதாகவும்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!