பிரித்தானியாவில் நாளை முதல் இது கட்டாயம்: மீறினால் 6,400 பவுண்ட் வரை அபராதம்!

பிரித்தானியாவில் நாளை முதல் ஒரு சில பகுதிகளில் முகக்கவசம் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதை மீறினால் 6400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை Omicron வைரஸ், பிரித்தானியாவில் தற்போது 11 பேரை பாதித்துள்ளது. இதனால் அரசு பல பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்துள்ளது.

    
அதில் மிகவும் முக்கியமானது முகக்கவசம் அணிவது, பிரதமர் போரிஸ்ஜோன்சன் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் முகக்கவசம் ஒரு சில பகுதிகளில் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த புதிய வகை Omicron வைரஸ் மிகவும் ஆபத்தானது என்பது இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதே சமயம் சில மருத்துவர்கள் இது டெல்டா வைரஸை விட குறைவான பாதிப்பை தான் ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனமும், இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவுகிறதா அல்லது தடுப்பூசிகளின் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவில்லை.

இதனால், Omicron வைரஸ் விஷயத்தில், பல தகவல்கள் சந்தேகத்தின் அடிப்படையிலே வெளிவருகின்றன. இருப்பினும் இந்த வைரஸ் பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க பிரித்தானியா அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் படி தற்போது அரசு சிறிய அளவில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அது எங்கெங்கு என்பதை பார்ப்போம்.
பொதுப் போக்குவரத்து(டாக்சிகள் உட்பட) மற்றும் மக்கள் அதிகம் கூடும் கடைகளில்.
மூடப்பட்ட ஷாப்பிங் மையங்கள்
வங்கிகள் மற்றும் கட்டிட சங்கங்கள்
ஓட்டுநர்கள் சோதனை செய்யும் இடங்கள்
தபால் நிலையங்கள்
மருந்தகங்கள்முடி மற்றும் அழகு நிலையங்கள்

போன்றவைகளில் முகக்கவசம் கட்டாயம் அணியம் வேண்டும்.
இது போன்ற இடங்களில் முகக்கவசம் அணியாமல் அதிகாரிகளிடம் சிக்கினால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படுமாம்.

இந்த அபராதம் ஒவ்வொரு முறையும் சிக்கும் போது, இரட்டிப்பாகி 6,400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முகக்கவசம் அணிய தேவையில்லாத இடங்கள்
11 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகககவசம் அணிய தேவையில்லை.
உணவகங்கள்
கபேக்கள்பார்கள் மற்றும் பப்களில் இந்த விதிகள் பொருந்தாது.

இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் நாளை(நவம்பர் 30) அதிகாலை உள்ளூர் நேரப்படி 4 மணி முதல் அமுலுக்கு வரும்.

அதன் பின் மூன்று வாரங்களுக்கு பின் குறித்த கட்டுப்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் பின் புதிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் ஒரு சாதரண கிறிஸ்துமஸ் ஆகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!