எப்போது வெடிக்குமோ எரிவாயு சிலிண்டர்?

சமையல் எரிவாயு எப்போது வெடிக்கும் என்கிற அச்ச உணர்வு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கூட்டமைப்பு எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன், இந்த அச்சத்தை போக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், எரிபொருள் விலை அதிகரிப்பு நாட்டு மக்களுக்கும் பெரும் சுமையாக உள்ளது. இதனை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் அனைத்து பொருள்களின் விலைகள் நள்ளிரவில் அதிகரிக்கப்படுகின்றன. இது மிகப்பெரிய சுமையாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

அதேபோல சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமையல் எரிவாயு வெடிக்கும் என்கிற பயம் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையின்மையே இதற்குக் காரணம். இனிமேல் எரிவாயு வெடிக்காது என்கிற மனநிலையை மக்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!