போலி ஆவணங்களை சமர்ப்பித்து கோவிட் நிவாரண நிதியை பெற்ற அமெரிக்கர்: பின்னர் செய்த அதிர்ச்சிகரமான செயல்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு நபர் லம்போர்கினி கார் மற்றும் ரோலக்ஸ் வாட்ச் வாங்குவதற்காக தனது கொரோனா வைரஸ் நிவாரண நிதியைப் பயன்படுத்தியதற்காக 9 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நீதித்துறையின் கூற்றுப்படி, லீ பிரைஸ் III (Lee Price III) எனும் 30 வயதான நபர், போலியான சம்பள காசோலை பாதுகாப்பு திட்டம் (PPP) கடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து 1.6 மில்லியன் டொலர் பெற்றுள்ளார்.
    
அவர் தனது சட்டவிரோத நடவடிக்கைகளை மறைப்பதற்காக 3 ஷெல் நிறுவனங்களைத் திறந்து பணத்தை மோசடி செய்துள்ளார்.

பிரைஸ் தனது கடன் கோரிக்கைகளை நிரூபிக்க போலியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வரி பதிவுகளை சமர்ப்பித்ததாக நீதித்துறை கூறியது.

பிரைஸ், நிபந்தனையின்றி குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் அவர் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டார் என்று நீதிமன்றம் கண்டறிந்த நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
அமெரிக்க்காவில் நாவல் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக கோவிட்-19க்கான நிவாரணத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அவை மே 31, 2021 அன்று முடிவடைந்தது.

இத்திட்டங்கள் தொடர்பான குற்றங்களுக்காக 474 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அரை பில்லியன் டொலர்கள் மோசடியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!