பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும்!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். என்று இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தினார்.
    
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பொன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இலங்கையரான பிரியந்த குமார கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், சாதாரண சம்பவம் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அது உண்மையெனில் அதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது தொடர்பில் அவர் இலங்கை மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும். தான் வெளியிட்ட கருத்தை மீளப்பெற வேண்டும்” – என்றார்.

இது மோசமான சம்பவம் என்று சொல்ல முடியாது. உணர்ச்சியில் இது போன்ற செயல்கள் சில நேரங்களில் நடந்து விடுகின்றன என்று கூறி, இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளமை பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!