ஐ.நா உதவிச் செயலாளர் கன்னி விக்னராஜா கொழும்பு வருகிறார்!

ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் , ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் உதவி நிர்வாகி மற்றும் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான UNDP பிராந்திய பணியகத்தின் பணிப்பாளர் கன்னி விக்னராஜா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
    
5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர், டிசெம்பர் 13 திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் பல்வேறு தரப்பினருடன் அவர் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!