
“இந்த படகு இந்தோனேசியாவிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. கடுமையான அலைகள் காரணமாக இப்படகு கவிழ்ந்திருக்கிறது,” என ஜோஹோர் கடல்சார் நடவடிக்கைகளின் துணை இயக்குநர் லோக் அக் துசா தெரிவித்திருக்கிறார்.
மலேசியாவின் தொழிற்சாலைகளிலும் தோட்டங்களிலும் பணியாற்றும் நோக்கத்துடன் அந்நாட்டிற்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டவிரோத படகுப் பயணங்களின் போது இவ்வாறு மோசமான விபத்துகளில் சிக்குவது தொடர் நிகழ்வாக இருந்து வருகின்றது.
இந்தோனேசியாவில் செயல்படும் Migrant CARE அமைப்பின் கணக்குப்படி, ஆண்டுதோறும் வேலைத்தேடி சட்டவிரோதமாக மலேசியாவுக்கு செல்லும் இந்தோனேசியர்களின் எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை உள்ளது. இதில் பலர் கடத்தல் கும்பல்களின் வசம் சிக்கி மலேசியாவில் சுரண்டலுக்கு உள்ளாகும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!