பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய சர்வகட்சி மாநாடு!

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    
பொருளாதார நெருக்கடியை தேசிய பிரச்சினையாக கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் நோக்கத்தை துறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொவிட்-10 வைரஸ் தாக்கத்தினால் பூகோள பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் ‘நூல் அறுந்த பட்டத்தை போன்று’ உயர்வடைந்து செல்கிறது. உலக சந்தையின் விலையேற்றத்தை தேசிய மட்டத்தில் தீர்மானிக்க முடியாது. பொருளாதார நெருக்கடியினை அரசியல் கோணத்தில் இருந்து பார்க்கும் போது தவறான நிலைப்பாடுகள் மாத்திரம் தோற்றம் பெறும்.

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருடிக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சர்வக்கட்சி மாநாட்டை நடத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியினை தேசிய பிரச்சினையாக கருது அனைத்து தரப்பினரும் அரசியல் நோக்கத்தை துறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

இலங்கை 11 முறை சர்வதேச நாணய நிதியத்தின் உதவினை பெற்றுள்ளது.உதவி பெறும் போது நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய நேரிடும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அடிபணியும் போது தேசிய மட்டத்தில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரிக்கவும், அத்தியாவசிய பொருள் இறக்குமதியையும் மட்டுப்படுத்த நேரிடும். அது தேசிய மட்டத்தில் வேறுப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு பரந்துப்பட்ட கொள்கைத்திட்டத்தை வகுப்பது அவசியமாகும்.ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள சர்வக்கட்சி மாநாடு ஒரு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்கும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!