கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்! – அமைச்சர் அவசர உத்தரவு

பண்டிகைக் காலங்களில் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நடமாடும் சுற்றுப்பயணங்கள் மற்றும் ரோந்துகளை அமுல்படுத்துவதற்கு மேலதிகமாக திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை கையாள்வதற்கு அதிகமான பொலிஸ் அதிகாரிகளை சிவில்களில் ஈடுபடுத்துமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (21) சுமார் 7285 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 1901 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையில் 795 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதுடன், 2910 மோட்டார் சைக்கிள் 2640 முச்சக்கரவண்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!