அடுத்த வாரம் துபாய் செல்லும் பிரதமர்

பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அடுத்த வாரம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் துபாய் நாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது.

துபாயில் நடைபெற்ற ஏக்ஸ்போ 2020 கண்காட்சியின் சர்வதேச வைபவம் 2022 ஜனவரி 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதில் பிரதம அதிதியாக கலந்துக்கொள்வதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச துபாய் செல்கிறார். இதனடிப்படையில், பிரதமர் எதிர்வரும் 2 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் உடல் நலம் காரணமாக பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளாமல் தவிர்க்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!