கருப்பையிலேயே கல்லாக மாறிய குழந்தை: அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

73 வயது மூதாட்டி ஒருவரின் வயிற்றில் இருந்து 7 மாத குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஜிரியாவில் உள்ள Skikda நகரில் 73 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
    
அப்போதம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அதில் மூதாட்டியின் வயிற்றில் 35 ஆண்டுகளுக்கு முன் குழந்தை உருவாகி அந்த குழந்தை கல்லாக மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 2 கிலோ எடை கொண்ட இந்த கல் குழந்தை 7வது மாதம் வரை வளர்ச்சியடைந்து கல்லாக மாறியுள்ளது. மருத்துவத்தில் இவ்வாறான கருவை lithopedion என்று கூறுவார்கள். உலகில் இதுபோன்ற சம்பவங்கள் சுமார் 290 நபருக்கு ஏற்பட்டுள்ளது.

கருமுட்டையில் கரு உருவாகாமல் அடி வயிற்றில் கரு உருவானால் இந்த பாதிப்பு ஏற்படுமாம். ஆனால் அவ்வாறு உருவாகினால் கரு ஒரிரு நாளில் தானாகவே வெளியேறிவிடும்.

அந்த வகையில் இந்த மூதாட்டிக்கு அவ்வாறு வெளியேறாததால் குழந்தை கல்லாக மாறியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!