எண்ணெய் தாங்கி காணிகள் பாதுகாப்பு அமைச்சிடமே உள்ளன!

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அமைந்துள்ள காணி உரிமம் பெற்றோலிய கூட்டு தாபனத்திடம் இல்லை. இவ்வாறானதொரு நிலையில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எந்தவொரு நடவடிக்கைகளையும் இந்த நிலப்பரப்பிற்குள் முன்னெடுக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
    
இங்கிலாந்து ரோயல் கடற்படைக்கு சொந்தமாகக் காணப்பட்ட இந்த நிலப்பரப்பு பாதுகாப்பு அமைச்சு ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டது.

எனவே அதன் மீதான அதிகாரமும் உரிமமும் பாதுகாப்பு அமைச்சிடமே காணப்படுகிறது.
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதிகள் தொடர்பில் இந்தியாவுடன் இணக்கப்பாட்டினை எட்டிய போது , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை கடற்படையினர் அதற்குள் பிரவேசிக்க முடியும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே நிபந்தனை விதித்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எண்ணெய் தாங்கிகள் காணப்படும் காணி இன்று வரையும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்தாக்கப்படவில்லை. மாறாக அரசாங்கத்திடமே காணப்படுகிறது. இவ்வாறான பின்னணியின் கீழ் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சிடமே காணப்படுவதாக ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.\

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!