அரசாங்கம் சர்வதேசத்தின் ஆதரவை இழந்தமைக்கான காரணம்:மைத்திரி

நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே மகுடத்திற்கு மதிப்பு கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena)தெரிவித்துள்ளார். குருணாகல் நாரம்பலயில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறை கைதிகள் கொலை செய்யப்படுவது ஆரம்பமானது. வழக்குகள் ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்யப்பட்ட பலர் வழக்குகளில் இருந்து விடுதலையாகினர்.

இதன் காரணமாக நாட்டுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போனது. வருடக்கணக்கில் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டால், எப்படி சர்வதேசத்தின் ஆதரவு கிடைக்கும்?.

18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பது மன்னன் ஒருவருக்கு இல்லாத அதிகாரங்களை கூட வழங்ககக் கூடிய சட்டம். இதன் காரணமாகவே மாஹராஜா என்று அழைத்தனர்.
மகுடம் மன்னனுடையது, நாடு மக்களுக்குரியது என்று பாடல் ஒன்றும் உள்ளது. நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டாலேயே மகுடத்திற்கு மதிப்பு கிடைக்கும். ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பின்னர், பிரதமரின் அதிகாரங்கள் அதிகரித்தன. எங்கோ இருக்கும் சபாநாயகரும் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக மாறினார்.

திருடர்கள் இல்லாத அரசாங்கத்தை அமைக்க முடியாது, திருடர்களுடன் அரசாங்கத்தை அமைக்கலாம் என எனது நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். திருடர்களுடன் அரசாங்கத்தை அமைத்து, திருடர்களுக்கு எதிராக செயற்படுங்கள் என்று அவர் கூறினார்.

இப்படியான முறையை அவர் என்னிடம் முன்வைத்தார். அதுவும் உண்மைதான் என நான் கூறினேன். திருடினாலும் அவர்கள் நல்லவர்கள் என தெரிவித்தனர்.

நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் பலமான கட்சியாக கட்டியெழுப்புவோம். இடதுசாரி, மனிதாபிமானம் மற்றும் ஜனநாயகவாதிகள் ஒன்றிணைந்த அரசாங்கத்தை எதிர்காலத்தில் அமைக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிடடள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!