தடைகளை நீக்க அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்க வேண்டும்

வட­கொ­ரியா அணு ஆயு­தங்­களை முற்­றி­லு­மாக அழித்த பிறகே அந்­நாட்டின் மீது விதிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளா­தார தடைகள் விலக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சர் மைக் பாம்­பியோ தெரி­வித்­துள்ளார்.

வட­கொ­ரியா, ஜப்பான், வியட்னாம், ஐக்­கிய அரபு அமீ­ரகம், பெல்­ஜியம் உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சர் மைக் பாம்­பியோ அரசு முறை பயணம் மேற்­கொண்­டுள்ளார். பய­ணத்தின் முதல் நாடாக அவர், வட­கொ­ரியா தலை­நகர் பியோங்­யாங்­கிற்கு கடந்த 5 ஆம் திகதி சென்­றி­ருந்தார்.

சமீ­பத்தில், அணு ஆயு­தங்­களை மிக வேக­மாக அழிக்க வட­கொ­ரியா நட­வ­டிக்கை எடுக்க வேண்டுமென அமெ­ரிக்கா அவ­சரம் காட்டி அழுத்தம் கொடுத்­தது. ஆனால், அவ்­வ­ளவு வேக­மாக அழிப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள முடி­யாது என அமெ­ரிக்­கா­விற்கு எதி­ராக வட­கொ­ரியா காட்­ட­மான அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தது.

இதனால், வட­கொ­ரிய பய­ணத்தின் போது கிம் ஜாங் அன்னை சந்­திக்­காத பாம்­பியோ, வட­கொ­ரிய உயர் அதி­கா­ரி­களை சந்­தித்தார், அவர்­க­ளிடம் சமீ­பத்தில் இரு­ நா­டு­க­ளுக்கு இடையே போடப்­பட்ட சிங்­கப்பூர் ஒப்­பந்தம் குறித்தும், அணு சோதனை மையங்­களை அழிப்­பது தொடர்­பா­கவும் அவர் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

வட­கொ­ரியா பய­ணத்தை முடித்­து­கொண்டு, பாம்­பியோ நேற்று ஜப்பான் தலை­நகர் டோக்­கியோ சென்­ற­டைந்தார். அங்கு தென்­கொ­ரியா மற்றும் ஜப்பான் நாட்டின் வெளி­யு­றவு மந்­தி­ரிகள் உடன் நீண்டநேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தினார். பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறு­கையில், “வட­கொ­ரியா அணு ஆயு­தங்­களை முற்­றி­லு­மாக அழித்த பிறகே அந்­நாட்டின் மீது விதிக்­கப்­ப­ட்டுள்ள பொரு­ளா­தார தடைகள் விலக்­கி கொள்­ளப்­படும்.

மேலும், சிங்­கப்பூர் ஒப்­பந்­தத்தில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு, அணு ஆயு­தங்கள் வட­கொ­ரி­யாவில் முற்­றி­லு­மாக அழிக்­கப்­பட்­டு­ விட்­டதா என ஆய்வு குழு­வினர் ஆய்வு செய்து சரி ­பார்த்த பின்­னரே பொரு­ளா­தார தடைகள் விலக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்” என பாம்­பியோ தெரி­வித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!