எவரும் வெளியேறலாம், எவரும் உள்ளே வரலாம்!

அரசாங்கத்தை விட்டு எவரும் வெளியேறலாம். வெளியில் இருந்து எவரும் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
    
“கொரோனா வைரஸ் தொற்றால் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை உடனே நிமிர்த்த முடியாது. கடந்த அரசும் எமது அரசிடம் ஆட்சியைக் கையளிக்கும்போது நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியில் இருந்ததை எவரும் மறந்திடலாகாது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்தும் நடவடிக்கையில் நிதி அமைச்சு ஈடுபட்டுள்ளது. அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் உத்தமர்கள் அல்லர். அதேவேளை, அரசை விமர்சிக்கும் எதிரணியினரின் வாய்ச்சவடால்கள் குறித்து பொதுமக்கள் நன்கறிவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!