பொய்களால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது:டளஸ் அழகப்பெரும

உண்மையான பிரச்சினைகளை மறைத்து மக்களுக்கு பொய்களை கூறுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியாது என ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dalas Alahapperuma ) தெரிவித்துள்ளார்.

கஷ்டமான சந்தர்ப்பங்களில் அர்ப்பணிப்புகளை செய்யுமாறு மக்களிடம் கோரிக்கை வீடுப்பதற்கு பதிலாக அமைச்சர்கள் அர்ப்பணிப்புகளை செய்து முன்னுதாரணத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எதிர்காலத்தில் சில மணி நேரங்கள் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என மின்சார சபை கூறுகின்றது.

எரிபொருள் இல்லாததே இதற்கு காரணம். நிலக்கரி தொடர்பான பிரச்சினையும் உள்ளது. மக்களிடம் எதனையும் மறைக்க முடியாது. மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் கூறும் போது, மின்சார சபையின் தலைவர் கொஞ்ச நேரம் மின்னை துண்டிக்க நேரிடும் என்கிறார்.
அப்போது வீட்டின் கூடத்தில் இருப்பவருக்கு கேள்விகள் எழும். சமூக ஊடகங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்து பட்டிலையே வெளியிட்டுள்ளன.

எதனையும் எவராலும் மூடி மறைக்க முடியாது. மக்களுக்கு உண்மையை கூறி பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்.

நாங்கள் அர்ப்பணிப்புகளை செய்ய ஆரம்பிப்போம். அரசியல்வாதிகளே அர்ப்பணிப்பை செய்ய வேண்டும். மக்களை அர்ப்பணிப்புகளை செய்யுமாறு கோரினால், அரசியல்வாதிகளுக்கு பைத்தியம் எனக் கூறுவார்கள் எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!