கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கோவிட் தொற்றாளர்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் சகல படுக்கைகளிலும் தற்போது கோவிட் நோயாளிகள் நிரம்பியுள்ளதாக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அந்தோனி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இரண்டு தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் நோயாளிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது.

தற்போது நாடு முழுவதும் தேசிய வைத்தியசாலையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால் இது அலையாக மாறியுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு அனுப்பபப்டுகின்றனர்.

மேலும் சிலர் அதி தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோவிட் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், தடுப்பூசியே அதனை கட்டுப்படுத்த ஒரே வழி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!