திருமண நிகழ்வில் கலந்துகொண்ட நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டானை சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 18ஆம் திகதி கொச்சிக்கடை பிரதேசத்தில் குறித்த  திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளான 30 போ் இதுவரை  அடையாளங்காணப்பட்டுள்ளதாக கட்டானை சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏனையவர்கள் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அத்துடன், குறித்த திருமண நிகழ்வின்போது மதுபானம் அருந்தி  நடன நிகழ்வில் கலந்துகொண்ட சிலருக்கு நிகழ்வு நிறைவடைந்து ஒருசில நாட்களிலேயே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனா்.

இதேவேளை, தொற்றுக்குள்ளான ஏனையவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்டானை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளாா்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!