சதொச நிறுவன வழக்கில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் விடுதலை

சதொச  நிறுவன ஊழியர்கள்   தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு டி பயன்படுத்தப்பட்டதாகஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மூவர் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன்பெர்னாண்டோ உள்ளிட்ட  இருவர்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  வழக்கு  கொழும்பு பிரதான  நீதவான் நீதிமன்றில்  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  நீதவான் புத்திக சிறி ராகல  இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

 அமைச்சர்  ஜோன்ஸ்டன்  பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு2010 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

 2010 முதல் 2014  ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில்சதொச நிறுவன  ஊழியர்கள் 153  பேரை  தேர்தல்பிரசாரம் மற்றும் ஏனைய சேவைகளுக்காக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!